அடிப்படை மனிதக்குணம் இல்லாத மனிதர், எனக்கு நடந்த மாதிரி யாருக்கு நடக்க கூடாது.. நடிகை மனிஷா வெளிப்படை
கோலிவுட்டில் சீனு ராமசாமி - மனிஷா விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றில் சீனு ராமசாமி மற்றும் மனிஷா யாதவ் ஆகிய இருவரிடமும் பேட்டி எடுத்து பதிவு செய்துள்ளது.
அதில் சீனு ராமசாமி பேசுகையில், இடம், பொருள், ஏவல் ஷூட்டிங் சமயத்தில் நானும், மனீஷாவும் வெவ்வேறு ஹோட்டல்களில்தான் தங்கி இருந்தோம்.
அப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள். கிராமத்து நாயகியாக இவர் சரியாக நடிக்க மாட்டார் என்பதால் விஜய் சேதுபதிக்கு பதில் விஷ்ணு விஷாலின் ஜோடியாக நடிக்க சொன்னேன். இல்லை. எனக்கு இந்த கேரக்டர்தான் வேண்டுமென சொன்னார். ஆகவே அவரை படத்தில் இருந்து நீக்கினேன். அந்த கோபத்தில் என் மீது பழி போட்டிருக்கலாம் என்று சீனு ராமசாமி கூறினார்.
பிறகு ஏன் சில தினங்களுக்கு முன்பு மனிஷாவிற்கு போன் செய்தீர்கள்? என்று சீனு ராமசாமி இடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், எனது புதிய படத்தில் ஒரு வழக்கறிஞர் கேரக்டர் உள்ளது. அதில் நடிக்க விரும்புகிறீர்களா எனக்கேட்கவே போன் செய்தேன் என்று கூறியுள்ளார்.
மனிஷா யாதவ் பதிலடி
சீனு ராமசாமியின் பேச்சு பதிலடி கொடுத்த மனிஷா யாதவ், சில தினங்களுக்கு முன்பு சீனு ராமசாமி ஆபீஸில் இருந்து எனக்கு போன் வந்தது.
அவருடைய புதுப்படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்டார்கள். பல வருடங்கள் என்னிடம் பேசாதவர்... இப்போது பேச வேண்டிய அவசியமென்ன என சந்தேகப்பட்டேன். இடம், பொருள், ஏவல் படத்தில் அவர் நடந்து கொண்ட விதம் மோசமாக இருந்தது.
பலமுறை என்னிடம் நெருங்க நினைத்தும், அவர் விருப்பத்திற்கு இணங்காமல் நான் இருந்தேன். ஆகவே என்னை படத்தில் இருந்து நீக்கினார். எனக்கு நடிக்கத்தெரியாது என திரைத்துறையினர் பலரிடமும் பொய்த்தகவல் பரப்பினார். ஆகவே சில தினங்களுக்கு முன்பு அவரது புதுப்பட வாய்ப்பை நிராகரித்து விட்டேன். இதுபற்றி என் அம்மாவிடம் கூறினேன்.
மேடை நாகரீகத்திற்காக மட்டுமே 'ஒரு குப்பைக்கதை' பட நிகழ்ச்சியில் நன்றி சொன்னேன். ஆனால் தற்போது அதை வேறுவிதமாக மாற்றி சொல்லியிருக்கிறார். இவ்வளவு மோசமாக நடந்து கொள்ளும் ஒருவர் என்ன தைரியத்துடன் இப்படி பொய் பேசுகிறார்? எனக்கு புதுப்படத்தில் வாய்ப்பு தருவதன் மூலம் இவர் செய்த தவறுகள் மூடி மறைக்கப்படும் என நினைக்கிறாரா?
அடிப்படை மனிதக்குணம் கூட இல்லாத இப்படியான மனிதர்கள் மீது எனக்கு எந்த மதிப்புமே இல்லை என்று கூறியுள்ளார்.
எனக்கு நல்ல கணவர், நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகள் உள்ளது. என்னைப்போல எந்த ஒரு புது நாயகியும் இப்படியான மோசமான அனுபவங்களை சந்திக்கவே கூடாது என்று மனிஷா யாதவ் கூறியுள்ளார்.