நடிகையுடன் சர்ச்சை முதல் விவாகரத்து வரை!! இயக்குநர் சீனு ராமசாமியை சுற்றும் பிரச்சனை...

Divorce Seenu Ramasamy Manisha Yadav
By Edward Dec 12, 2024 11:30 AM GMT
Report

தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் சமீபகாலமாக விவாகரத்து செய்து வருவது பலருக்கும் அதிர்ச்சியளித்து வருகிறது. சமந்தா, தனுஷ், ஜிவி பிரகாஷ், ஜெயம் ரவி, ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் விவாகரத்து அறிப்பை வெளியிட்டு ஷாக் கொடுத்தனர்.

அவர்களை தொடர்ந்து பிரபல இயக்குநராக திகழ்ந்து வரும் இயக்குநர் சீனு ராமசாமி மனைவியுடன் 17 ஆண்டுகால திருமண பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக இன்று அதிகாலை ட்விட்டர் பக்கத்தில் சீனு ராமசாமி வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

நடிகையுடன் சர்ச்சை முதல் விவாகரத்து வரை!! இயக்குநர் சீனு ராமசாமியை சுற்றும் பிரச்சனை... | Manisha Yadav Casting Couch Issue To Divorce Seenu

இந்நிலையில் சீனு ராமசாமி சமீபத்தில் சந்தித்த பிரச்சனைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

வழக்கு எண் 18/9, திரிஷா இல்லைன்னா நயன் தாரா உள்ளிட்ட படங்களில் நடித்த மனிஷா யாதவ், தான் சினிமாவில் இருந்து ஒதுங்க காரணமே சீனு ராமசாமி தான் என்றும் அவர் கொடுத்த பாலியல் தொல்லையால் தான் இதற்கு காரணம் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வெளியாகாமல் இருக்கும் ஏவல் படத்தின் படப்பிடிப்பில் சீனு ராமசாமி கொடுத்த பாலியல் தொல்லையால் அந்த படத்தில் இருந்து விலவிட்டதாக மனிஷா யாதவ் கூறியிருந்தார்.

இதுகுறித்து பத்திரிக்கையாளர் பிஸ்மி, அந்தணன் உள்ளிட்டவர்கள் சீனு ராமசாமி, மனிஷா யாதவ்விற்கு கொடுத்த பாலியல் தொல்லையை அம்பலப்படுத்தினர். இந்த பிரச்சனை முடிந்து ஒரு வருடம் கழித்து சீனு ராமசாமி, மனைவி தர்ஷனாவை பிரிவதாக அறிவித்திருக்கிறார்.