கல்யாணத்துக்கு அப்புறம் நடிக்க கூடாதுன்னு இருந்தேன்..ஆனா!! நடிகை மஞ்சிமா மோகன்..
மஞ்சிமா மோகன்
மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மஞ்சிமா மோகன். கடந்த 2022ல் நடிகர் கெளதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்தார்.
அதனையடுத்து படங்களில் நடித்து வந்த மஞ்சிமா மோகன் சுழல் 2 வெப் தொடரில் நாகம்மா என்ற விலைமாது ரோலில் நடித்துள்ளார். இந்த வெப் தொடருக்கான பிரமோஷன்களில் கலந்து கொண்டும் பேட்டியளித்து வந்தார் மஞ்சிமா.
பிரேக்
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து பிரேக் எடுக்கலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் என் கணவர், நீங்க சும்மாலாம் வீட்க உட்காரக்கூடாதுன்னு சொன்னாரு. நமக்கு எது பிடிக்கும் என்று யோசித்து பார்த்தபோது கடைசியில் நடிப்பு, சினிமா தான் பிடிச்சதால் மீண்டும் நடிக்க முடிவெடுத்தேன்.
அதன்பின் என் நண்பரிடம் பேசும் போது, நான் எப்படி வாய்ப்பு கேட்கிறது என்று கேட்டேன். அந்த சமயத்தில் காயத்ரி மேடம் கிட்ட பேசும் போது சுழல் 2 தொடர் பண்ணப்போகிறோம்.
ஆரம்பிக்கும் போது சொல்கிறோம் என்றார். பின் இயக்குநர் கதை கூறியபோது எனக்கு பிடித்திருந்தது. கதை குறித்து கெளதமிடம் சொன்ன போது, கதை புதுசா இருக்கு, கண்டிப்பா பண்ணனும் சொன்னாரு என்று மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.