அதற்காக உடலில் அறுவை சிகிச்சை செய்தேன்!! திருமணத்திற்கு பின் உண்மையை சொன்ன மஞ்சிமா..

Manjima Mohan
By Edward Aug 17, 2025 03:33 AM GMT
Report

மஞ்சிமா மோகன்

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மஞ்சிமா மோகன். கடந்த 2022ல் நடிகர் கெளதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்தார்.

அதனையடுத்து படங்களில் நடித்து வந்த மஞ்சிமா மோகன் சுழல் 2 வெப் தொடரில் நாகம்மா என்ற விலைமாது ரோலில் நடித்துள்ளார். இந்த வெப் தொடருக்கான பிரமோஷன்களில் கலந்து கொண்டும் பேட்டியளித்து வந்தார் மஞ்சிமா. தான் எப்படி உடல் எடையை குறைத்தேன் என்பதை பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

அதற்காக உடலில் அறுவை சிகிச்சை செய்தேன்!! திருமணத்திற்கு பின் உண்மையை சொன்ன மஞ்சிமா.. | Manjima Mohan Opens Up About Body Shaming

பிசிஓடி

அதில், எனக்கு பிசிஒடி இருந்ததால் கொஞ்சம் எடைய கூடியபோது, நான் ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்தேன். பிசிஓடியை குறைக்க வேண்டியிருந்தது.

எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்து, அறுவை சிகிச்சை மூலம் எடையை குறைக்க மருத்துவர்களை சந்தித்தேன். உடல் எடைதான் மிகப்பெரிய பிரச்சனை என்பதுபோல் எல்லோரும் பேசுகிறார்கள். நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

சினிமா என் வேலை மட்டுமே. எடையை குறைத்து வேறொரு தோற்றத்திற்கு வந்தால், ஒருவேளை இன்னும் சில படங்கள் கிடைக்கலாம். அதன்பிம் யாரும் நாம் எப்படி இருக்கிறோம் என்று விசாரிக்க மாட்டார்கள். வேலை சம்பந்தமில்லாத வேறு இல்லக்குகள் எனக்கு உள்ளது என்று அந்த பேட்டியில் பேசியுள்ளார் நடிகை மஞ்சிமா மோகன்.