நீ ரொம்ப குண்டா அசிங்கமா இருக்க! நடிகையை மோசமான வர்ணித்த நபர்..
பிரபலகள் திடீரென தங்கள் உடல் எடையை ஏற்றி மோசமாக மாறிவிடுவது பார்த்திருப்போம். தற்போது இளம் நடிகைகள் கூட ஒல்லியாக இருந்து குண்டாக மாறுவதை பலர் கேலி செய்தும் வருகிறார்கள். தானும் இப்படியான கேலி கிண்டலுக்கு ஆளாகியிருப்பதாக நடிகை மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.
தன்னை உருவ கேலி செய்து வந்தவர்களுக்கு தன்னுடைய சமூக வலைத்தளம் மூலம் மஞ்சிமா தற்போது பதிலளித்துள்ளார். நாம் அனைவரும் ஆரோக்கியமாக தான் இருக்க எண்ணுகிறோம், ஆனால் அது அனைவருக்கும் ஒரே போல் இருப்பதில்லை. சிலருக்கு இயற்கையாகவே உடல் எடை கூடும், சிலருக்கு செயற்கையாக உடல் எடை கூடிவிடும்.
ஆனால் நாம் அதற்கு யாரையும் குறை கூற முடியாது. இதனால் தயவுசெய்து ஒருவரின் உருவத்தை வைத்து உருவ கேலி செய்வதை இனிமேலாவது நிறுத்துங்கள். நீங்கள் இவ்வாறு கேலி செய்வதால் அவருக்கு என்ன எடை குறைய போகிறதா என்ன?
அவர்களின் நம்பிக்கையை தான் அது குறைக்கும். என்னுடைய திருமணத்தை மனதில் பலரும் தற்போது அவ குண்டம்மா, அந்தப் பையன் பாவம் என குறுஞ்செய்தி அனுப்பி வருகிறார்கள். ஆனால் இது என்னுடைய தனிப்பட்ட விஷயம் யாரும் இதை பற்றி கருத்து கூற வேண்டாம் என்று அவர் கூறியிருக்கிறார்.