பிரபல சீரியல் நடிகைக்கு கத்திக்குத்து, மருத்துவமனையில் பரிதாபம்... கைதான கணவர்

Tamil Cinema
By Yathrika Jul 13, 2025 12:30 PM GMT
Report

நடிகை மஞ்சுளா

கன்னட சினிமாவில் பிரபலமான சின்னத்திரை நடிகைகளில் ஒருவர் மஞ்சுளா.

இவர் 20 வருடத்திற்கு முன் அம்ரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

ஆனால் கணவருடன் ஏற்படும் தகராறு காரணமாக தனியாக மஞ்சுளா வாழ்ந்து வர சமீபத்தில் மீண்டும் இணைந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென ஒருநாள் அம்ரேஷ் வீட்டிற்கு வந்து மஞ்சுளா கண்ணில் பெப்பர் ஸ்ப்ரே அடித்துவிட்டு தன்னிடம் இருந்து கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டவர்கள் நடிகையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

நடிகை தற்போது மருத்துவமனையில் பரிதாப நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. போலீசார் அம்ரேஷை கைது செய்துள்ளனராம்.

பிரபல சீரியல் நடிகைக்கு கத்திக்குத்து, மருத்துவமனையில் பரிதாபம்... கைதான கணவர் | Manjula Husband Arrested For Stabbing Her