ரீ ரிலீஸான மங்காத்தா படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ

Ajith Kumar Box office
By Kathick Jan 31, 2026 11:00 AM GMT
Report

அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்களில் ஒன்று மங்காத்தா. வில்லன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என காட்டிய படம் இது.

இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆண்ட்ரியா, வைபவ், மகத், பிரேம்ஜி, ராய் லட்சுமி, பிரேம்ஜி என பலரும் நடித்திருந்தனர்.

ரீ ரிலீஸான மங்காத்தா படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ | Mankatha Movie Re Release Box Office

2011ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்ற இப்படத்தை மீண்டும் 15 ஆண்டுகளுக்கு பின் கடந்த வாரம் ரீ ரிலீஸ் செய்தனர்.

ரசிகர்களால் திரையரங்கில் கொண்டாடப்பட்டு வரும் மங்காத்தா ரீ ரிலீஸ், ஒவ்வொரு நாளும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இந்நிலையில், 8 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 20.5 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.