மங்காத்தா ரீ ரிலீஸ் வசூல் வேட்டை.. பாக்ஸ் ஆபிஸில் அமர்க்களம் செய்யும் அஜித்
Ajith Kumar
Box office
By Kathick
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக தனக்கென்று தனி இடத்தை உருவாகியுள்ளவர் அஜித். இவர் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் மங்காத்தா.
இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க திரிஷா, அர்ஜுன், ஆண்ட்ரியா, அஞ்சலி, வைபவ், மகத், பிரேம்ஜி, ராய் லட்சுமி என பலரும் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், 15 ஆண்டுகள் கழித்து இப்படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளனர். கடந்த 23ஆம் தேதி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், ரீ ரிலீஸாகியுள்ள மங்காத்தா படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 9 கோடி வசூல் செய்துள்ளது.