புதிதாக தொழில் தொடங்கியுள்ள முன்னணி நடிகை.. யார் தெரியுமா?

Tamannaah Actress
By Kathick Jan 25, 2026 02:30 AM GMT
Report

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. 2005ம் ஆண்டு அறிமுகமான இவர் கடந்த 20 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார்.

இப்போது நடிகை தமன்னா கதாநாயகியாக நடிப்பதை தாண்டி படங்களில் ஒரேஒரு பாடலுக்கு நடனமாடி செம ஹிட்டாகி வருகிறார்.

புதிதாக தொழில் தொடங்கியுள்ள முன்னணி நடிகை.. யார் தெரியுமா? | Tamannaah Bhatia Launched Own Jewellery Business

தமன்னா ஆடினாலே அந்த பாடல் செம ஹிட் தான் என்றாகிவிட்டது. ஒரு பாடல் நடனம் ஆடுவதற்காக தமன்னா பல கோடிகள் சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை தமன்னா சினிமாவை தாண்டி புதிதாக தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். Tamannaah Fine Jewellery என்ற நிறுவனத்தை தான் தமன்னா தொடங்கி இருக்கிறார். மும்பையில் இதன் தொடக்க விழா விமர்சையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.