கோடிகோடியாய் வசூல் செய்யும் மங்காத்தா.. ரீ ரிலீஸில் சாதனை படைக்கும் அஜித்
Ajith Kumar
Box office
By Karthick Raja
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குட் பேட் அக்லி படம் மாபெரும் வெற்றிபெற்றது.
இதை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் இருந்து தொடங்கும் என கூறப்படுகிறது.

அஜித்தின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றான மங்காத்தா சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், 6 நாட்களை கடந்திருக்கும் மங்காத்தா படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 20 கோடி வசூல் செய்துள்ளது.