நம்ப வைத்து ஏமாத்திட்டாரு சிவா..அஜித் படத்தால் வாழ்க்கையே போச்சு!! நடிகை மனோ சித்ரா..
மனோ சித்ரா
காஞ்சிபுரத்தில் பிறந்து சினிமாவுக்குள் நுழைந்து, தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை மனோ சித்ரா. நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான அவள் பெயர் தமிழரசி என்ற படத்தில் அறிமுகமாகிய மனோ சித்ரா, நீர்பறவை படத்தில் முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
வீரம், நேற்று இன்று, அந்தமான் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த மனோ சித்ரா பல ஆண்டுகளாக ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போய்விட்டார்.
வீரம்
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், வீரம் படத்தின் கதையை என்னிடம் கூறியபோது, படத்தில் தமன்னா பாதியில் இறந்துவிடுவார், அதன்பின் அஜித்துக்கு நீங்கள் தான் ஜோடி என்று சொன்னார்கள். இயக்குநர் சிவா அப்படி சொன்னதும் சந்தோஷத்தோடு அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன்.
ஆனால், அதற்கு பின் தான் தெரியும் அவர்கள் என்னிடம் சொன்னது எல்லாம் பொய். இருந்தாலும் அஜித்துக்காகத்தான் அந்த படத்தில் நடித்தேன், வீரம் படத்தில் நடித்ததால் என் சினிமா வாழ்க்கையே பாதிப்படைந்துவிட்டது என்று மனோ சித்ரா ஓப்பனாக பேசியுள்ளார்.