ஒரேவொரு பேரால் வந்த பிரச்சனை! அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயனால் புலம்பும் பிரபல சீனியர் நடிகர்..

Sivakarthikeyan
1 மாதம் முன்
Edward

Edward

சின்னத்திரையில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து நடிகராக மாறியவர்கள் வரிசையில் டாப் இடத்தில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தன்னுடைய உழைப்பால் உயர்ந்து தற்போது 30 கோடிக்கும் மேல் சம்பளம் பெரும் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

அவர் நடித்து வெளியான படங்கள் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து மக்கள் மனதில் நல்ல மதிப்பையும் மரியாதையும் பெற்று வருகிறார். சீனியர்கள் நட்சத்திரங்களானாலும் சரி சிறிய கதாபாத்திர நட்சத்திரங்களானாலும் சரி அனைவருக்கும் மரியாதை கொடுத்து வருகிறார் சிவா.

அப்படி தற்போது அவர் நடிப்பில் டான், அயலான், தெலுங்கு இயக்குனரின் ஒரு படம் என பிஸியான காலக்கட்டத்தில் இருந்து வருகிறார் சிவகார்த்துகேயன். இன்று டான் படத்தின் டிரைலர் மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது. இதை சிவகார்த்திகேயனே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சிவகார்த்திகேயன் டிவிட்டர் பக்கத்தில், படத்தில் பணியாற்றிய இயக்குனர் சிபி சக்ரவர்த்தி, எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி, பிரியங்கா மோகன், கலையரசு, உதயநிதி, லைக்கா ரெட் ஜியண்ட், சோனிமியூசிக் போன்றவர்களின் டிவிட்டர் ஐடியை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த இயக்குனரும் நடிகருமான மனோபாலா எங்க என் பேரு?? என்று சிவகார்த்திகேயன் டிவிட்டர் பதிவிற்கு டிவிட் செய்துள்ளார். இதனை நெட்டிசன்கள் கலாய்த்து உங்களையே இப்படி அசிங்கப்படுத்திட்டாங்களே சார் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.