1500 படங்கள்! இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் ஒரே படம் மட்டும் இப்படியா?

தமிழ் சினிமாவில் காமெடி லிஜெண்ட் நடிகர்கள் பல இருந்து வந்த நிலையில் பெண்களில் காமெடி லெஜெண்ட் நடிகை என்ற பெயரை பெற்றவர் நடிகை மனோரமா. ஆச்சி என்று அனைவராலும் அழைக்கப்படும் மனோரமா சுமார் 1500 படங்களுக்கும் மேல் நடித்து வந்தார். மேலும் பத்மஸ்ரீ, கலைமாமணி, வாழ்நாள் சாதனையாளர் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

இத்தனை பெருமைகளை படைத்த ஆச்சி ஒரு தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். 1963 இல் வெளிவந்த கொஞ்சும் குமரி என்ற திரைப்படம் தான் அது. அதன்பிறகு மனோரமா நகைச்சுவை வேடங்களில் முக்கியத்துவம் கொடுத்து நடித்துவந்தார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், சிங்களம் போன்ற பிற மொழிகளிலும் நடித்துள்ளார். புதிய பாதை திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்