'நான் மன வருத்தம் அடைகிறேன்'.. நடிகர் மன்சூர் அலி கான் பேட்டி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலி கான் திரிஷாவை பற்றி அவதூறாக பேசினார். இதற்கு திரிஷா தனது சோசியல் மீடியா பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு மன்சூர் அலிகானுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து மன்சூர் அலிகான் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தது.
இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான், நான் ஜாலியாக பேட்டி கொடுத்தேன். நடிகை திரிஷா அதை தவறாக எடுத்துக்கொண்டார்கள். நான் அப்படி பேசவில்லை. நான் பேசியதில் அவர் மனம் வருத்தம் அடைந்து இருந்தால் அதற்கு நானும் மனம் வருத்தம் அடைகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் சிலர் நான் தலைமறைவாக இருப்பதாக பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். அதனால் தான் தற்போது ஆஜர் ஆனேன் என கூறினார்.