திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டேனா!! பிஆர்ஓ மீது பழியை போட்ட மன்சூர் அலிகான்
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து அதற்காக சமீபத்தில் சக்சஸ் மீட் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் லியோ படத்தில் நடித்த பலரும் கலந்து கொண்டு பேசினர். அப்படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான், திரிஷாவை காட்டவில்லை, அவருடன் ஒரு காட்சி கூட இல்லை என்று புலம்பினார்.
ஆனால் அப்போது அவர் பேசியதை பார்த்து நடிகை திரிஷா உட்பல பலர் சிரித்தனர். அதன்பின் பேட்டியொன்றில் நடிகர் மன்சூர் அலிகான், குஷ்பூ, ரோஜாவுடன் நடித்த ரேப் சீன் மாதிரி, திரிஷாவை கட்டிலில் போட்டு இருக்கும் ரேப் சீன் இருக்கும் என்று நினைத்தேன் என்று கொச்சையாக பேசியிருந்தார்.
இதுகுறித்து பலர் கண்டனத்தை தெரிவித்த நிலையில் திரிஷாவும் கண்டித்து ஒரு பதிவினை பகிர்ந்தார். திரிஷாவுக்கு முன்னணி நடிகர்கள் முதல் பல பிரபலங்கள் ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து மன்சூர் அலிகானை கண்டித்தனர்.
இதுதொடர்பாக போலிசார் கைது செய்து விசாரித்தன் பின்னர், மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டார். அதற்கு திரிஷாவும், தவறு செய்வது மனிதகுணம், மன்னிப்பது தெய்வகுணம் என்று கூறினார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், திரிஷாவிடம் நான் மன்னிப்பு கேட்கவில்லை, தொலைப்பேசியில் என்னை மரணித்துவிடு என்று கூறியதை மன்னித்துவிடு என்று PRO தவறாக புரிந்துகொண்டார் என்றும் மீண்டும் பிரச்சனையை வளர்க்க வேண்டாம் என்பதால் அந்நேரத்தில் அமைதியாகிவிட்டேன் என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். இதற்கு பலரும் கடுமையாக மன்சூர் அலிகானை திட்டியவாறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.