ரோஜா மன்சூர் அலி கான் இடையே இருந்த காதல்..சினிமாவை விட்ட விலக காரணமே இதுதான்!

Roja Mansoor Ali Khan Tamil Actors Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 29, 2023 06:32 AM GMT
Report

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் 1992 -ம் ஆண்டு வெளியான செம்பருத்தி படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் ரோஜா.

இப்படத்தை தொடர்ந்து தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம் எனப் பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது ரோஜா அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார் ரோஜா கடந்த 2002 -ம் ஆண்டு ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்ஷுமாலிகா என்ற மகளும் கிருஷ்ணா கௌசிக் என்ற மகளும் உள்ளனர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற செய்யாறு பாலு ரோஜா குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் மன்சூர் அலி கானை ஒரு முறை சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம், "செம்பருத்தி படத்தில் செம்பருத்தி என்னுடைய சொத்து, செம்பருத்தி என்னுடைய சொத்து என்று வசனம் பேசினேன். ஆனால் கடைசியில் ரோஜாவை ஆர்.கே.செல்வமணி திருமணம் செய்துவிட்டார்" என்று மன்சூர் அலி கான் சொன்னார்.

அவருக்கும் ரோஜா மீது ஒரு தலைகாதல் இருந்துள்ளது. திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டு ரோஜா தனக்கு இருக்கும் புகழை வைத்து ஆந்திர அரசியலில் இறங்கி, தற்போது கலக்கி வருகிறார் என்று செய்யாறு பாலு கூறியுள்ளார்.