தலைவர் டான்ஸ் வேற வெவல்? மன்சூர் அலிகானை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவில் 90களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியவர் மன்சூர் அலிகான். மலையாளத்தில் அறிமுகமாகி மன்சூர் அலிகான் 1990ல் வெளியான வேலை கிடைச்சுருச்சு படத்தின் மூலம் தமிழில் நடிக்க ஆரம்பித்தார்ன்.
இதன்மூலம் பலரால் கவரப்பட்டவர் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். பின் அடுத்தடுத்த படங்களில் வில்லனாக நடித்து மிரட்டி வந்த மன்சூர் அலிகான் அரசியலிலும் ஈடுபட்டு சர்ச்சையான பேச்சுகளிலும் செயல்களையும் செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் கூட தன் மகனை நடிகராக்கி ஒரு படத்தினை தயாரித்தும் வருகிறார். இணையத்தில் அவர் பேசிய வீடியோக்கள் காமெடி நிகழ்ச்சி இணையத்தில் வைரலானதை தொடர்ந்து சக்கு சக்கு வத்திக்குச்சி என்ற பாடலுக்கு ஏற்கனவே இவர் நடனமாடி கலக்கி இருந்தார்.
தற்போது அதே பாடலை இந்த வயதில் ஆடிய ஆட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Celebrityclicks | நடிகர் மன்சூர் அலிகானின் Dancemode!#SunNews | #MansoorAliKhan pic.twitter.com/yMEwFJrIE6
— Sun News (@sunnewstamil) June 25, 2022