ஏ ஆர் ரகுமானை புகழ்ந்து தள்ளிய மாரிமுத்து!! இளையராஜாவால் விரட்டியடித்த ராஜ்கிரண்..
தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தயாரிப்பாளராக கலமிறங்கியவர் நடிக்கவும் செய்தவர் ராஜ்கிரண். இப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்து வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.
அப்படத்தினை தொடர்ந்து அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் போன்ற படங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று ராஜ்கிரணுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது. அதன்பின் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்த ராஜ்கிரண் பல ஆண்டுகள் கழித்து பவர் பாண்டி படத்தில் நடித்தார்.
தற்போது பல படங்களில் நடித்து வரும் ராஜ்கிரண், பல வெற்றியை கொடுத்ததற்கு இளையராஜாவும் முக்கிய காரணம். அவர் இசையில் ராஜ்கிரண் படங்கள் அமைந்து சூப்பர் டூப்பர் ஹிட் பெற்றது. இதனால் இளையராஜா மீது அலாத பிரியம் வைத்திருந்தார் ராஜ்கிரண்.
இந்நிலையில், நடிகரும் துணை இயக்குனருமான மாரிமுத்து,ராஜ்கிரணின் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, ரோஜா படம் வெளியான போது அதை பார்த்துவிட்டு அங்கு பெருமையாக பேசிக்கொண்டிருந்தாராம் மாரிமுத்து.
மேலும் ஏ ஆர் ரகுமானி இசையை பற்றி நாள் முழுக்க பேசிக்கொண்டிருப்பதை சிலர் ராஜ்கிரணிடம் போய் சொல்லியுள்ளனர். இதனால் அப்செட்டில் இருந்த ராஜ்கிரணிடம் இல்லாததையும் சொல்லி கடுப்பேற்றியும் இருக்கிறார்கள்.
இதை கேள்விப்பட்டதும் ராஜ்கிரண், மாரிமுத்துவை அலுவலகத்தில் இருந்தே அனுப்பிவைத்துவிட்டாராம். இதை சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.