பெண்ணுக்கு நான் தான் நம்பர் கொடுத்தேன்!! சர்ச்சையை ஏற்படுத்திய நடிகர் மாரிமுத்து..

Serials
By Edward Feb 28, 2023 06:15 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டு நடிப்பு, இயக்கம் என்று இருந்து வருபவர் நடிகர் மாரிமுத்து. தற்போது எதிர்நீச்சல் என்ற சீரியலில் நடித்து அனைவரையும் ஈர்த்து வருகிறார் நடிகர் மாரிமுத்து.

சமீபத்தில் மாரிமுத்துவிடம் 18 பிளஸ் கண்டெண்ட் பதிவிடும் டிவிட்டர் கணக்கில் இருந்து ஒரு பெண்ண மாரிமுத்துவிடம் நான் கால் செய்யலாமா என்று பதிவிடப்பட்டது. அதற்கு மாரிமுத்துவும் எஸ் என்று கூறியதோடு அவரது மொபைல் நம்பரையும் பகிர்ந்துள்ளார்.

இந்த விசயம் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதுகுறித்து மாரிமுத்துவின் மகன் அகிலன் விளக்கம் கொடுத்திருந்தார். எனது தந்தையின் தொலைபேசி எண் பலரிடம் இருக்கிறது என்றும் சிலர் அதை தவறுதலாக பயன்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

அதன்பின் அந்த கணக்கு டெலீட் செய்யப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து மாரிமுத்து தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியொன்றில், ஆமாம் நான் தான் ஒரு பெண்ணுக்கு நம்பர் கொடுத்தேன்.

இயக்குனர், நடிகராக இருக்கும் நான் ஒரு பெண்ணுக்கு நம்பர் கொடுத்தது என்ன தவறு. என் நம்பரை கொடுப்பதற்கு எனக்கு உரிமை இருப்பதாகவும் அந்த பெண் கேட்டதால் தான் நம்பர் கொடுத்தேன் என்றூம் கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் இவர் இல்லை, சிலர் வேண்டுமென்றே இதை உருவாக்கி பரப்பியிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார் மாரிமுத்து.

GalleryGalleryGallery