35 கிலோ குறைத்து ஆள் ஆடையாளம் தெரியாமல் மாறிய WWE மார்க் ஹென்றி! ஷாக்காகும் ரசிகர்கள்..

markhenry wwe Wrestling
By Jai Jun 16, 2021 03:30 PM GMT
Report

கிரிக்கெட்டை தாண்டி 90ஸ் கிட்ஸ்களில் பிடித்தமான விளையாட்டு போட்டி என்றால் அது WWE குத்து சண்டை போட்டிதான். பலவிதமான நெறிமுறைகளை வைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தனர். இதில் முக்கியமான விளையாட்டு வீரரான மார்க் ஹென்றி பாதிக்குப் பாதி தனது உடல் எடையை குறைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2017ல் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் மார்க் ஹென்றி. இதையடுத்து, எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் மார்க் ஹென்றி. முன்னர் 163 கிலோவில் இருந்த மார்க் ஹென்றி தற்போது 35 கிலோ குறைத்து உடல் எடையை மெலிதாக்கி அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போய் விட்டனர். இந்த அளவிற்கு உடல் எடையைக் குறைக்க முடியுமா.? என்பது போன்ற சாதித்து காட்டியுள்ளார்.

GalleryGallery