ஹெல்த் இன்சூரன்ஸ் ஓகே!! அதென்ன மேரேஜ் இன்சூரன்ஸ் பாலிசி!! எதுக்கு தெரியுமா..
Marriage Insurance
திருமணம் என்பது தற்போதைய காலக்கட்டத்திற்கு ஆரம்பரமாகிவிட்டது. இப்படி செய்தால் தான் கவுரவம், பலர் மதிப்பார்கள் என்று பல கோடிகளில் கூட செலவு செய்து திருமணம் நடத்துவார்கள். இதனால் இல்லாதபட்டவர்கள் கடன் வாங்கி திருமணம் நடத்துவார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் ஹெல்ட் இன்சூரன்ஸ் போன்று திருமண காப்பீடு என்பதும் நமக்கு முக்கியமானது என்று யாருக்காவது தெரியுமா?. திருமண ரத்து, விபத்து, இயற்கைச்சீற்றம் போன்ற எதிர்பாராத நிகழுவுகளால் பாதிக்கப்படும் போது இழப்புகளை ஈடு செய்ய இந்த காப்பீடு திட்டம் பயன்படுகிறதாம்.
ஹோட்டல் முன்பதிவு, போக்குவரத்து போன்ற செலவுகளும் இதில் அடங்குமாம். திருமணத்திற்கு மட்டும் இந்தியாவில் 4.25 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது என்று புள்ளி விவரங்கள் சொல்கிறது. அப்படிப்பட்ட ஆடம்பர திருமணத்தில் பாதுகாப்புமின்மைகள் உள்ளன.
காப்பீடு செல்லும் செல்லாது
திருமணம் ரத்து, திருமண இடத்தில் விபத்து, அல்லது திருமணத்தை பாதிக்கும் இயற்கை சீற்றங்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏதேனும் காரணத்திற்காக திருமணம் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது தேதி மாற்றப்பட்டாலோ சமையல் கலைஞர்கள், பிறருக்கு செலுத்தப்படும் பணம் உள்ளிட்ட ஹோட்டல் மற்றும் போக்குவரத்து முன்பதிவுகளும் இதில் அடங்கும், இதனை காப்பீட்டு நிறுவனம் செலுத்தும் அல்லது ஈடு செய்யும்.
சாலையில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் இதுவும் உதவும். பிறவி நோய், கடத்தல் அல்லது தற்கொலை போன்ற காரணங்களால் மரணம் ஏற்பட்டாலும் இந்தக் காப்பீடு செல்லாது.
மேலும் தீவிரவாத தாக்குதல் அல்லது இயற்கைக்கு மாறான காயம் ஏற்பட்டால் இந்தக் கொள்கை செல்லாது. பஜாஜ், ஐசிஐசிஐ, நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் ஓரியன்டல் இன்சூரன்ஸ் கம்பெனி இந்த காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.