ஃபுல் ரொமான்ஸ்.. திருமணத்திற்கு பிறகு லிப்லாக் வீடியோவை வெளியிட்ட நிக்கி

Aadhi Nikki Galrani
By Jai Aug 15, 2022 05:00 PM GMT
Report

சினிமாவில் ஜோடியாக நடித்து ரியல் ஜோடியாக மாறிய நட்சத்திரங்கள் பலர் இருக்கிறார்கள். அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா உள்ளிட்டவர்களை தொடர்ந்து சமீபத்தில் கல்யாணம் செய்து கொண்டவர்கள் ஆதி - நிக்கி கல்ராணி.

டார்லிங், வெள்ளைக்காரன், மொட்டசிவா, கலகலப்பு, ஹரஹர மஹாதேவகி, மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நிக்கி கல்ராணி மரகத நாணய்ம், யாகாவராயினும் நாகாக்க போன்ற படங்களில் ஆதியுடன் நடித்தார்.

இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதலாக மாறியப்பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் மே 18 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்தில் எடுத்து ஒருசில புகைப்படங்களை மட்டும் வெளியிட்ட ஆதி தற்போது ஆசை மனைவி நிக்கி கல்ராணிக்கு அன்போடு உதட்டில் முத்தம் கொடுத்த வீடியோவை முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.