யாராவது அப்படி சொல்லுவாங்களா..விஜய் ஒரு சைக்கோ..சர்ச்சையை ஏற்படுத்திய பிரபலம்..

Vijay Gossip Today Thamizhaga Vetri Kazhagam
By Jai Oct 29, 2024 10:30 AM GMT
Report

முதல் மாநாடு

தவெக தலைவர் தளபதி விஜய் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி கட்சியின் முதல் மாநாட்டினை விக்கிரவாண்டி வி சாலையில் பிரம்மாண்ட முறையில் நடத்திமுடித்தார்.

பல கோடி செலவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொண்டு தளபதி பேசியதை கொண்டாடினார்கள் என்று கூறப்பட்டது. மாநாட்டில் முதன்முதலாக பேசிய விஜய், கொள்கைகள் முதல் 2026 தேர்தல் வரையிலான நடவடிக்கைகள் குறித்து விஜய் காரசாரமாக பேசியிருந்தார்.

அதிலும், விஜய் பேசிய பல விஷயங்கள் பலரது எதிர்ப்பை கிளப்பி இருக்கும் நிலையில் விஜய் தன் கேரியர் பற்றி பேசியதையும் சிலர் விமர்சித்து வந்துள்ளனர்.

தோழர் மருதையன்

இந்நிலையில், தோழர் மருதையன் என்பவர் அளித்த பேட்டியொன்றில், விஜய் மேடையில் உச்சத்தில் இருக்கும் மார்க்கெட்டை விட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்று பேசியிருக்கிறார்.

யாராவது அப்படி பேசுவாங்களா, அந்த ஆளே சொல்லியிருக்கான் என்றால் எந்தளவுக்கு சைக்கோவா இருப்பான் என்று கூறியிருக்கிறார். அவர் இப்படி கூறி பேசியிருப்பது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.