வேண்டவே வேண்டாம்னு சொன்ன நடிகர் திலகம்!! ஒரே வார்த்தையில் செக் வைத்த கமல்..
தேவர் மகன்
தேவர் மகன் படத்தை போல் சர்ச்சைகளையும் பாராட்டுக்களையும் பெற்ற மற்றொரு படம் ஒன்று இல்லை. தமிழ் சினிமாவில் மிகமிக நேர்த்தியாக எழுதப்பட்ட திரைக்கதைகளுள் முக்கியமானது தேவர் மகன். இப்படத்தை இயக்குநர் மிஷ்கின் அடிக்கடி பாராட்டுவார்.

இப்படத்தின் மறுபுறத்தில் இதன்மீதான விமர்சனங்களும் கடுமையாக இருந்தது. தென்மாவட்டங்களில் சாதிய வன்முறைகள் நிகழ்ந்ததற்கு தேவர் மகன் படம் ஒரு முக்கிய காரணியாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. சாதியப்பெருமிதத்தை பேசிய படம், தமிழ் சினிமாவில் அரிவாள் கலாச்சாரத்தை உருவாக்கிய படம் என்றெல்லாம் விமர்சனம் எழுந்தது.
நடிகர் திலகம்
இந்நிலையில், துல்லியமாக யோசித்து இயக்கிய கமல் ஹாசன் மற்றும் படத்தை பற்றி மருது மோகன் பேட்டியொன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், கமல் சென்று இதுபோல கதை எழுதியிருக்கிறேன் என்று சிவாஜி அவர்களிடம் கூறினார். அதற்கு அவர் வேண்டாம் விடு நான் நடிக்கவில்லை என்று கூறிவிட்டார்.

உடனே கமல் நீங்கள் நடிக்கவில்லை என்றால் இந்த கதையை நான் எடுக்கமாட்டேன் என்று கூறினார். உடனே பிரபு மற்றும் ராம்குமார் அனைவரும் சேர்ந்து சொன்னவுடன் அவர் நடிக்க ஒப்புக்கொண்டார்.
அவர் ஓகே சொன்னதும் சிவாஜிக்கு மீசை வைக்க வேண்டும் என்று கூறினார். கமலுடைய ஐடியா தான் அந்த மீசை. அவ்வப்போது அவரே வந்து ட்ரிம் செய்துவிடுவார். இந்த மீசையுடன் யாருக்கும் போஸ் கொடுக்க வேண்டாம் என்றும் கூறினார். இதை தாண்டி கமல் அவர்கள் சிவாஜியிடம் வெறும் 7 நாட்கள் மட்டுமே கால்ஷீட் வாங்கி அவரது கதாபாத்திரத்தை சூட் செய்து முடித்துள்ளார்.