வெள்ளித்திரை டூ சின்னத்திரை!! மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு..
கேப்ரியல்லா சார்ல்டன்
நடிகர் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் தான் 3. இப்படத்தில் ஸ்ருதி ஹாசனின் தங்கை ரோலில் நடித்தவர் தான் குட்டி நட்சத்திரமான கேப்ரியல்லா சார்ல்டன். இப்படத்திற்கு பின் அப்பா படத்தில் குட்டி சிறுமி ரோலில் நடித்து பிரபலமானார்.
குட்டி நட்சத்திரமாக ஆயிரம் சம்பாதித்த கேப்ரியல்லா, அப்பா படத்திற்காக பல லட்சம் சம்பளமாக வாங்கியிருக்கிறார். இதன்பின் சினிமா பக்கம் தலைக்காட்டாமல் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்தார்.

பின் சீரியல்களில் நடித்து வந்த கேப்ரியல்லா, பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு 102 நாட்கள் வீட்டில் இருந்தார். இறுதியில் 5 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியை எடுத்து பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். இதன்மூலம் பிக்பாஸ் வீட்டில் 102 நாட்கள் இருந்ததற்கு 15 லட்சம் ரூபாய் மற்றும் பணப்பெட்டியோடு சேர்த்து 20 லட்சத்துடன் வெளியேறினார்.
சொத்து மதிப்பு
ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்தபோது கேப்ரியல்லாவுக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது சன் டிவியில் மருமகள் சீரியலில் ஆதிரை ரோலில் நடித்து வருகிறார். இந்த ரோலில் நடிக்க ஒரு நாளைக்கு அவர் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை சம்பளமாக பெற்று வருகிறார் என்று கூறப்படுகிறது.

அப்படி சீரியல், இன்ஸ்டாகிராம் போஸ்ட், சமூக வலைத்தளங்களில் பிராண்ட் புரொமோஷன் என்று நல்ல வருவாய் பார்த்து வருகிறார்.
அந்தவகையில் அப்படி சேமித்து வைத்திருக்கும் கேப்ரியல்லா, மாதம் ரூ. 5 லட்சம் முதல் ரூ7 லட்சம் வரை வருவாய் ஈட்டி வருகிறார். அதேபோல் கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு ரூ. 3 கோடி முதல் ரூ. 5 கோடி வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.