பிரம்மாண்ட நிகழ்ச்சிகாக குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி!வைரலாகும் வீடியோ..

vijaysethupathi tamannaah masterchef
By Edward Jun 30, 2021 12:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று பேர் பெற்று பல லட்ச ரசிகர்களை தன் நடிப்பால் ஈர்த்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் சிறு கதாபாத்திர நடிகராக அறிமுகமாகி வருடத்திற்கு 5 படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியில் மாஸ்டர் செஃப் என்ற சமையல் போட்டியை தொகுத்து வழங்கவிருக்கிறார் விஜய் சேதுபதி. அதற்காக பணிகள் ஆரம்பித்து ஹூட்டிங்கும் துவங்கியது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கும் நிகழ்ச்சியின் தெலுங்கு வெர்சன் நடிகை தமன்னா தொகுத்து வழங்கவிருக்கிறார்.

சமீபத்தில் ஹூட்டிங்கில் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலானதை தொடர்ந்து விஜய் சேதுபதி கரக்காட்ட குழுவுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.