ஆவலோடு மாஸ்டர் படத்திற்காக காத்திருந்த மாஸ்டர் நாயகிகள்! எடுபடாத ஏமாற்றத்தில் நடிகை மாளவிகா.
கொரானா லாக்டவுனிற்கு பிறகு பல பிரச்சனைகளை தாண்டி நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் பொங்களை முன்னிட்டு ஜனவரி 13ல் வெளியானது. 50 சதவீத இருக்கைகளை கொண்டு படங்கள் தியேட்டர்களில் ரிலீசாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அள்ளிக்கொடுத்துள்ளது.
ஒரே நாள் வசூலில் தமிழகம் முழுவது 30 கோடிகளை கொண்டு மொத்தம் 40 கோடி சாதனையை முறியடித்தது. இந்நிலையில், படத்தில் நடிகர்களுக்கு கொடுத்த வாய்ப்பும் காட்சிகளும், முக்கியத்துவமும் நடிகைகளுக்கு கொடுக்கவில்லையாம். அந்தவகையில், கதாநாயகியாக நடித்திருந்த மாளவிகா மோகனுக்கு மாஸ்டர் படம் பெரும் எதிர்ப்பார்ப்பை கொடுத்து அவரின் மார்க்கெட்டை மாற்றும் என்று எதிர்ப்பாத்தார்.
அதை ரசிகர்களும் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் மாளவிகா மோகனுக்கு ஏமாற்றத்தையே தந்தது. ஏனென்றால் ஒரு பெரும் ஹீரோ படத்தில் நடித்தால், கதாநாயகியின் பாத்திரம் நன்கு எழுதப்படாமல் இருப்பது சகஜம்தான். சில நேரங்களில் திரையில் வந்து செல்லும் நேரமும் குறைவாகத்தான் கிடைக்கும். இந்த பிரச்சனைதான் மாளவிகா மோகனுக்கும் நேர்ந்துள்ளது.
ஏனென்றால் மாஸ்டர் படத்தில் கதாநாயகிக்கான எந்த காட்சியும் சிறப்பாக அமையவில்லை என்பதுதான் உண்மை. ஏனெனில் மாளவிகா மோகன் இருந்த, குறைந்தபட்ச காட்சிகளில் கதாநாயகியின் தனிப்பட்ட திறமை வெளிப்படாமல் நடிக்க வைக்கவில்லையாம்.
அதுமட்டுமில்லாமல் படத்தில் எக்கச்சக்கமான நடிகர்களுக்கு கொடுத்த காட்சிகள் கூட நடிகைகளுக்கான காட்சிகள் இடம் பெற்றாமல் கதையின் கதாபாத்திரம் எதுவும் ஆத்மார்த்தமாக பதியவில்லை. ஒரு சிலரே மனதில் பதிந்தனர். உதாரணத்திற்கு ரம்யா, பாடகி சவுந்தர்யா, VJ தாரா என அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதன் காரணமாகத்தான் நடிகை ஆண்ட்ரியா பட ப்ரோமோஷன் என எதிலும் கலந்து கொள்ளவில்லை என்கின்றனர் கோலிவுட் பட்சிகள்.