சூப்பர் ஸ்டார் முகத்தில் காறி துப்ப தங்கிய ஸ்ரீதேவி!! பாரதிராஜா செய்த செயல்!! வைரமுத்து போஸ்ட்...

Bhagyaraj Rajinikanth Sridevi Vairamuthu Bharathiraja
By Jai Jul 05, 2026 07:06 AM GMT
Report

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக 16 வயதினிலே படத்தில் பணியாற்றினார் மறைந்த இயக்குநர் பாக்யராஜ். அதன்பின் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் உள்ளிட்ட படங்களில் வேலை பார்த்து வேலையையும் கற்றுக்கொண்டு பாரதிராஜாவுக்கும் உறுதுணையாக இருந்தார் பாக்யராஜ். தன்னுடைய குரு பாரதிராஜா இறந்த சில வாரங்களிலேயே ஜூன் 27 ஆம் தேதி காலை மாரடைப்பால் உயிரிழந்தார் பாக்யராஜ்.

சூப்பர் ஸ்டார் முகத்தில் காறி துப்ப தங்கிய ஸ்ரீதேவி!! பாரதிராஜா செய்த செயல்!! வைரமுத்து போஸ்ட்... | Vairamuthu Shares Story Of Bharathiraja Rajini

வைரமுத்து

இரு ஜாம்பவான்களை ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இழந்த அதிர்ச்சியில் பலரும் இன்னும் மீளவில்லை. அந்தவகையில் கவிப்பேரரசு வைரமுத்து பாரதிராஜா, பாக்யராஜ் குறித்தும், ரஜினி குறித்தும் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதிலும் ரஜினியை பற்றி பதிவிட்டதுதான் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

16 வயதினிலே படப்பிடிப்பு, சப்பாணியை அடித்த பரட்டையை, ஸ்ரீதேவி திட்டித்தீர்க்கும் காட்சி. பேசிமுடித்து ரஜினி முகத்தில் காறித்துப்ப வேண்டும். அந்தக் கற்றைக்காகத் தயாரித்து வைத்திருந்த சோப்பு நுரை பலமுறை எடுத்தும் முகத்தில் சரியாகப் படியவில்லை. உண்மையாகவே காறித் துப்புங்கள் என்கிறார் ரஜினி, ஐயோ மாட்டேன் என்று ஸ்ரீதேவி அலறி ஓடிவிடுகிறார். காட்சி உயிர்ப்போடு வரவேண்டும், நீங்களே துப்புங்கள் என்கிறார் பாரதிராஜாவிடம் ரஜினி.

சூப்பர் ஸ்டார் முகத்தில் காறி துப்ப தங்கிய ஸ்ரீதேவி!! பாரதிராஜா செய்த செயல்!! வைரமுத்து போஸ்ட்... | Vairamuthu Shares Story Of Bharathiraja Rajini

அவர் தயங்கித் தயங்கி ரஜினியின் முகத்தில் குப்பென்று அப்பும்படி காறித்துப்புகிறார் என ஒரு நீண்ட பதிவினை பகிர்ந்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் உச்ச இடத்திற்கு காரணம் இது மாதிரியான அர்ப்பணிப்பு மட்டும்தான், இப்போதுள்ள நடிகர்கள் பல விஷயங்களை ரஜினியிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அதிலும் அதை செய்த பாரதிராஜா கண்ணீரே விட்டிருக்கிறார் என்றால் அது அவ்வளவு ரியலாக எடுக்கப்பட்டிருக்கும் என்றும் கூறியிருக்கிறார்கள்.