விஜய்க்காக கோட் படத்தில் ஆட்டம் போட்ட திரிஷா!! வாங்கிய சம்பளம் இத்தனை கோடியாம்?
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது கோட் படம். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் கோட் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் நாட்டில் பல தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ள கோட் படம் வெளியான ஒரேநாளில் மட்டும் 120.32 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் விஜய்யுடன் மட்ட பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ள நடிகை திரிஷா லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு படத்திற்கு திரிஷா சுமார் 10 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.
தற்போது ஒரு குத்து பாட்டிற்கு அதுவும் விஜய்யின் கோட் படத்தின் மட்ட பாடலுக்கு 5 கோடி சம்பளமாக வாங்கியிருக்கிறார். இந்த தகவல் எந்தளவில் உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.