ஆண்களை மயக்க தான் கவர்ச்சி ஆடை போடுறேனா.. பதிலடி கொடுத்த பிக்பாஸ் நடிகை மாயா..
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நிறைவு பெற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் போட்டியாளர்கள் பற்றி இன்றுவரை இணையத்தில் பல விசயங்கள் பேசப்பட்டு வருகிறது. பிக்பாஸில் கலந்து கொண்டவர்கள் பேட்டியளித்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து பதிவுகளையும் பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் பலரின் வெறுப்புகளை சந்தித்து புல்லி கேங்க் லீடர் என்ற பெயரை எடுத்த மாயா இணையத்தில் ஒரு பதிவினை சில நாட்களுக்கு முன் பகிர்ந்திருக்கிறார்.
பாங்காக் அவுட்டிங் சென்றுள்ள மாயா, அங்கு கிளாமர் ஆடையும் பிகினி ஆடையும் அணிந்து இருந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்த சிலர், ஆண்களை மயக்க தான் கவர்ச்சி ஆடையை போட்டு இணையத்தில் பகிர்கிறீர்களா என்று அந்த பதிவிற்க்கு கமெண்ட் செய்ததை பார்த்துள்ளார் மாயா.
அதற்கு மாயா, இங்கே இருக்கும் எல்லா பெண்களும் மற்றவர்களை கவரவும் நல்லா தெரியவும், கிளாமராக தெரியனும் என்பதற்காக கிளாமர் ஆடையை அணிவது கிடையாது. அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதை அவர்கள் போடுறாங்க. அடக்கமா ஆடையணிந்தால் தான் மற்றவர்கள் மதிப்பார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள்.
ஆனால் அது கிடையாது. உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறதோ, பிகினி, உள்ளாடை காட்டுவது போல் ஆடையணிவது, மினி ஸ்கெர்ட் அணிவதால் அது ஆபாசம் என்று அர்த்தம் கிடையாது.
இந்த சமூகம் என்ன சொன்னாலும் உஙகள் காதில் கேட்டுக்கொள்ளாமல் உங்களுக்கு என்ன பிடித்த ஆடையை அணியுங்கள். சுதந்திரமாக இருக்கிங்க என்று தான் அர்த்தம். மற்றவர்களை கவரனும் என்று அவர்கள் அந்த ஆடையை அணிவது கிடையாது. அப்படி நடக்கவும் நடக்காது என்று தான் மாயா பதிலடி கொடுத்திருக்கிறார்.