பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் புதிய வைல்டு கார்டு போட்டியாளர்கள்! யார் தெரியுமா
பிக் பாஸ் 8 பிரமாண்டமாக துவங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கமலுக்கு பதிலாக தொகுப்பாளராக களமிறங்கிய விஜய் சேதுபதி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
18 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக் பாஸ் 8 தற்போது 16 போட்டியாளர்களுடன் நடைபெற்று வருகிறது. அர்னவ் மற்றும் ரவீந்தர் இருவர் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் புதிதாக போட்டியாளர்கள் களமிறங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த வைல்டு கார்டு என்ட்ரி தான்.
ஐந்து வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதாக சொல்லப்படுகிறது. அதில் ஒருவர் தான் பின்னணி பாடகி ஸ்வாகதா. கடந்த பிக் பாஸ் 7ல் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை மாயாவை அனைவருக்கும் நினைவு இருக்கும்.
அவருடைய அக்கா தான் இந்த ஸ்வாகதா. இவர் பிக் பாஸ் 8ல் வைல்டு கார்டு என்ட்ரியில் வருவார் என சொல்லப்படுகிறது.