அவங்க மட்டும் கல்யாணத்து வேண்டவே வேண்டாம்! விக்னேஷ் சிவனுக்கு நயன் தாரா போட்ட கண்டீசன்..
தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகளாக வளம் வந்து கொண்டிருந்தவர்கள் நயன் தாரா - விக்னேஷ் சிவன். கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலும் இருவரும் காதலித்து வந்த நிலையில் இன்று அவர்களின் திருமணம் மகாபலிப்புரத்தில் காலை நடைபெற்றது.
கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற திருமணத்திற்கு 200 பேர் கொண்ட பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்தனர். ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் சென்ற புகைப்படம் வெளியானது. ஆனால் திருமணத்திறகு மீடியாக்கள் தொலைக்காட்சிகளுக்கு வரவேற்பு கொடுக்கப்படவில்லை.
அவர்களை கூப்பிட்டால் மொத்த பிளானும் சொதப்பிவிடும் என்று தானாம். திருமண நிகழ்ச்சியை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்டதால் வீடியோக்கள் புகைப்படங்கள் கசியக்கூடாமல் இருக்க தானாம்..
கல்யாணத்துக்கு பின் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்திப்பார் என்று கூறியிருந்தார்.