கணவர் இறந்த துக்கம்.. இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போகிறாரா மீனா

Meena Marriage
By Kathick 2 மாதங்கள் முன்
Kathick

Kathick

நடிகை மீனாவின் கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

தன்னுடைய கணவர் மரணத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நடிகை மீனா குறித்து அண்மையில் ஒரு செய்தி உலா வந்துகொண்டு இருக்கிறது. நடிகை மீனாவிற்கு இரண்டாவது திருமணம் நடக்கவிருப்பதாகவும், அவருடைய பெற்றோர்கள் மீனாவை வற்புறுத்தி வருவதாகவும் கூறப்பட்டது. மேலும், மீனாவும் இதற்க்கு சம்மதம் தெரிவித்துவிட்டதகாவும் கூறினார்கள்.

இந்நிலையில், நடிகை மீனா முதல் முறையாக இரண்டாம் திருமணம் செய்தி குறித்து பேசியுள்ளார் " எனது கணவர் இறந்த துக்கத்தில் இருந்தே நான் இன்னும் வெளியே வரவில்லை, அதற்குள் இதுபற்றி எல்லாம் பேசுவதா. நான் இப்போது கதைகளை தேர்வு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். மற்றபடி என்னை பற்றி பரவும் தகவல் வெறும் வதந்தியே " என்று கூறியுள்ளார் மீனா. இதன்முலம் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.