எம் ஆர் ராதா முன் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்த நடிகை!! படத்தில் இருந்து தூக்கிய எம்ஜிஆர்...
செளகார் ஜானகி
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை செளகார் ஜானகி 100க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்துள்ளார். தன்னுடைய 15 வயதில் சென்னை வானொலியில் அறிவிப்பாளராக பணியாற்றி சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டார் செளகார் ஜானகி.
18 வயதில் குடும்ப சூழலுக்காக வாய்ப்பு தேடி சென்னை வந்த செளகர் ஜானகி, பல சோதனைகளை சந்தித்து சவுகார் என்ற படத்தில் என் டி ராமாராவிற்கு ஜோடியாக தெலுங்கில் அறிமுகமாகினார்.

அதன்பின் வளையாபதி என்ற தமிழ் படத்தில் நடிக்க ஆரம்பித்து 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்தார். கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த செளகார் ஜானகி, சிவாஜி, ஜெமினி, எம் ஜி ஆர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.
கால்மேல் கால்போட்டு
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது, யாராவது வந்தார்கள் என்றால் வணக்கம் சொல்லிவிட்டு கால்மேல் கால்போட்டு உட்காருவேன். மாடப்புறா படத்தில் எம்ஜிஆர், எம் ஆர் ராதா, எனக்கு என மூன்று பேருக்கும் ஷூட்டிங் நடந்தது. இரவு ஷூட்டிங்கின் போது எம் ஆர் ராதா வந்திருந்தார்.

அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு கால்மேல் கால்போட்டு உட்கார்ந்திருந்தேன். இதை எம் ஜி ஆர் எங்கயோ இருந்து பார்த்திருக்கிறார். அதன்பின் எம் ஆர் ராதாவை அழைத்து, செளகார் ஜானகி கால்மேல் கால்போட்டு அமர்ந்திருப்பது எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்.
அப்போது எம் ஆர் ராதா, ஐயோ அது எங்கயோ வெளிநாட்டில் பிறக்க வேண்டியது, அது தப்பு இல்லை அவர்கள் அப்படித்தான் என்று சொல்லியுள்ளார். இதையெல்லாம் எம் ஜி ஆர் கேட்டுள்ளார். பின் அப்படத்தில் இருந்து என்னை தூக்கிவிட்டு வேறொரு நடிகையை போட்டுவிட்டார்கள் என்று செளகார் ஜானகி தெரிவித்துள்ளார்.