ரஜினியின் செயல், படப்பிடிப்பு தளத்தில் அழுத மீனா.. என்ன ஆச்சு?
மீனா
90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் மீனா. ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
என் ராசாவின் மனசிலே படத்தில் நாயகியாக அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உயர்ந்தார்.
பல ஹிட் படங்களில் நடித்த இவர் திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகினார். தற்போது, மீண்டும் ஒரு சில ரோலில் நடித்து வருகிறார்.
என்ன ஆச்சு?
இந்நிலையில், நடிகை மீனா ரஜினியுடன் அவர் பணியாற்றியது குறித்து சில விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதில், " முத்து படத்தின் படப்பிடிப்பின்போது வெளியில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. அப்போது பவுன்சர்ஸ் என யாரும் இல்லை. மக்கள் அதிகப்படியாக திரண்டு எங்களை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.
நான் எழுந்து நிற்பதற்குள் ரஜினி சார் வெகு தூரம் நடந்து சென்று விட்டார். அதன் பின் அந்த மக்களிடம் இருந்து என்னை உதவியாளர்களும், லைட் மேன்களும் தான் காப்பாற்றினார்கள்.
அப்போது நான் அழுதேவிட்டேன். பின் ரஜினி சார் மற்றும் ரவிக்குமார் சாரும் தான் சமாதானப்படுத்தினார்கள்" என்று தெரிவித்துள்ளார்.