இரண்டாம் திருமணமா!! கோபத்தில் வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த நடிகை மீனா..
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் முதல் படமே ஹிட்டாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
சினிமாவில் கொஞ்சம் விலகி இருந்த மீனா, தற்போது சில படங்களில் நடிக்கிறார். மேலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். சமீபத்தில் அவரது கணவர் மரணமடைந்தது அவருக்கு பெரிய இழப்பை கொடுத்தது.
அதிலிருந்து மீண்டு பழைய நிலைக்கு மாறிய நிலையில், மீனா இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார், அந்த நடிகர் தான் என்று பல கிசுகிசுக்கள் வெளியானது. இதனை மறுத்தும் கருத்தினை பகிர்ந்திருந்தார் மீனா. அதை மீறியும் பலர் இரண்டாம் திருமணம் குறித்து செய்திகளை பகிர்ந்து வந்தனர்.
அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் நடிகை மீனா கோபத்தில் ஒரு கருத்தினை கூறியிருக்கிறார். அதில், ”வதந்திகள் என்னை வெறுப்பவர்களால் உருவாக்கப்பட்டு, முட்டாள்களால் பரப்பப்படுகின்றது. முட்டாள்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது” என்று சரியான பதிலடியை கொடுத்திருக்கிறார்.
