நடிகை மீனா கணவர் இப்படி தான் இறந்தாரா? உண்மையை உடைத்த கலா மாஸ்டர்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை மீனா. தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி மகள் நைனிகாவை பெற்றெடுத்து சினிமாவில் தெறி படத்தில் நடிக்க வைத்தார். இந்நிலையில் கடந்த மாதம் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நுரையீரல் பிரச்சனையால் மரணமடைந்த தன் கணவர் பற்றி அவதூறான வதந்தி செய்திகளை பரப்பாதீர்கள் என்றும் மீனா கேட்டுக்கொண்டார். இந்நிலையில் மீனாவின் நெருங்கிய தோழியான கலா மாஸ்டர் மீனா கணவர் மரணம் குறித்து தகவல் ஒன்றினை பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
பெங்களூரில் வசித்து வந்த வித்யாசாகர் வீட்டின் அருகில் புறா எச்சம் அதிகமாக காணப்படும். அது சுவாத்தில் குறை ஏற்படுத்தும் என்று கூறுவார்கள்.
பெங்களூரில் அது நிறைய இருக்கிறது. அப்படியாக பல லட்சத்தில் ஒருவருக்கு தான் இந்த இன்ஃபெக்ஸன் ஏற்படும். அது வித்யாசாகருக்கு வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார் கலா மாஸ்டர்.