2ஆம் திருமணத்திற்கு தயாராகிவிட்டாரா நடிகை மீனா!! முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்..
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் முதல் படமே ஹிட்டாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. சினிமாவில் கொஞ்சம் விலகி இருந்த மீனா, தற்போது சில படங்களில் நடிக்கிறார். மேலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.
சமீபத்தில் அவரது கணவர் மரணமடைந்தது அவருக்கு பெரிய இழப்பை கொடுத்தது. அதிலிருந்து மீண்டு பழைய நிலைக்கு மாறிய நிலையில், மீனா இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார், அந்த நடிகர் தான் என்று பல கிசுகிசுக்கள் வெளியானது. இதனை மறுத்தும் கருத்தினை பகிர்ந்திருந்தார் மீனா.
இந்நிலையில், மீனா இரண்டாம் திருமணம் குறித்து சினிமா விமர்சகர் அனிபா என்பவர் சில தகவல்களை கூறியிருக்கிறார். அதில், பிரபுதேவாவுடன் காதல் கிசுகிசுவிலும் நடிகை மீனா சிக்கினார்.
நடிகர் ஜெயராமுடனும் மீனா கிசுகிசுக்கப்பட்டார். முன்னணி நடிகர்களுடன் நடித்ததால் பெரிய வதந்திகள் இருந்தும் அதை பெரிதாக மீனா கண்டுக்கொள்ளவில்லை. படத்தை தயாரிக்கும் தவறை மீனா செய்யவில்லை.
மேலும் பேசிய அனிபா, இரண்டாம் திருமணம் பற்றி அவர்களிடம் கேட்டபோது, இன்னும் தன் கணவர் இறந்துவிட்டார் என்பதை நான் நம்பவில்லை, அவருடன் இருப்பதாக தான் நினைத்து வருகிறேன் என்று கூறினார். அப்படி இருக்கும் போது எப்படி பண்ணுவார், காலம் எதாவது முடிவு பண்ண வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.