கணவரை இழந்த ஒரே வருடத்தில் தனுஷுடன் இரண்டாம் திருமணமா!! கடுப்பாகிய முற்றுப்புள்ளி வைத்த நடிகை மீனா..
தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து அதன்பின் 13 வயதில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானவர் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த மீனா வித்யாசகர் என்பவரை திருமணம் செய்தும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
அவரது மகளை தெறி படத்தில் குட்டி நட்சத்திரமாகவும் அறிமுகம் செய்த மீனா, கதாநாயகியாக மலையாள படங்களிலும் நடித்து வந்தார். கடந்த ஆண்டு அவரது கணவர் நுரையீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்தது சினிமாத்துறையினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த துக்கத்தில் இருந்து நடிகை மீனா மீண்டு வந்து படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் சினிமாவில் அறிமுகமாகி 40 ஆண்டுகளாகியதை ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
கணவரை இழந்த மீனாவின் குடும்பத்தினர் தொழிலதிபர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் கசிந்து வைரலானது. ஆனால் இது அதிகாரபூர்வ அறிவிப்பில்லை என்றும் வதந்திதான் என்று கூறப்பட்டது.
சமீபத்தில் நடிகர் தனுஷுடன் மீனா இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என்றும் அதுகுறித்து பயில்வான் பேசிய விசயமும் இணையத்தில் வைரலாகியது. இதுகுறித்து நடிகை மீனா வருத்தத்துடன் பேட்டியொன்றில் கூறியிருக்கிறாராம்.
அதில், என் கணவர் இறந்த விசயமே என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. அதற்குள் இப்படியொரு வதந்திகள் வெளியாவதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. இப்போதைக்கு நல்ல கதைகள் அமைந்தால் படங்களில் நடிக்க கவனம் செலுத்துவதாகவும் என் மகளின் எதிர்காலத்தை அமைத்து தருவேன். இதுதான் எனக்கு முக்கியமானது என்று கூறி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை மீனா.
You May Like This Video