அந்த மாதிரியான இடத்திற்கு அழைத்த ஆண் நண்பர்கள்.. பேட்டியில் வேதனையை பகிர்ந்த நடிகை மீனா
Meena
By Dhiviyarajan
90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
மீனா தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தமிழில் ரவுடி பேபி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மீனா தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர்," நான் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்த போது எனக்கு அதிக ஆண் நண்பர்கள் இருந்தார்கள்".
"அந்த காலகட்டத்தில் பார்ட்டி, பப் கலாச்சாரம் தொடங்கியது. அப்போது என் நண்பர்கள் பப்க்கு அழைப்பார்கள். ஆனால் என்னுடைய அம்மா அதற்கெல்லாம் அனுமதி தரவில்லை" என்று மீனா சோகமாக கூறியுள்ளார்.