விஜய்யின் ஜோடி மீனாட்சி சவுத்ரியின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார் மீனாட்சி சவுத்ரி. இவர் கடந்த ஆண்டு விஜய்யின் நடிப்பில் வெளிவந்த கோட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மேலும் லக்கி பாஸ்கர், சங்கராந்திகி வஸ்துனம் என தொடர்ந்து சூப்பர்ஹிட் திரைப்படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். குறிப்பாக கடைசியாக வெளிவந்த சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த நிலையில், தென்னிந்திய சினிமாவில் தற்போது தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகை மீனாட்சி சவுத்ரியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இவர் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக ஆரம்பத்தில் ரூ. 50 லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்த நிலையில் தற்போது அதிரடியாக ரூ. 3 கோடி வரை தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார் என சொல்லப்படுகிறது. மேலும் விளம்பரங்களில் நடிக்க ரூ. 50 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
ஐதராபாத்தில் இவருக்கு சொந்தமான வீடு ஒன்று இருக்கிறது. இந்த வீட்டின் விலை ரூ. 2 கோடி என கூறப்படுகிறது. இறுதியாக நடிகை மீனாட்சி சவுத்ரியின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 15 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.