என்னம்மா நீங்க இப்படி மாறிட்டீங்க! 40 வயசுல க்ளாமர் ரூட்டுக்கு தாவிய நடிகை மீரா ஜாஸ்மின்
கேரள நடிகைகள் தமிழ் சினிமாவின் 90 காலக்கட்டத்தில் அறிமுகமாவது அதிகரித்து வந்தது. தற்போது இருக்கும் நயன் தாரா, கீர்த்தி சுரேஷ் உட்பட பல நடிகைகள் கேரள நடிகைகள் தான். அதேபோல் 2001ல் ரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் கேரள நடிஅகி மீரா ஜாஸ்மின்.
முன்னணி நடிகை என்ற இடம்:-
நடிகர் மாதவனுக்கு ஜோடியாக ரன் படத்தின் மூலம் அறிமுகமாகி மிகப்பெரிய ஹிட் கொடுக்க காரணமாக இருந்தார் மீரா ஜாஸ்மீன். இதையடுத்து, பாலா, புதிய கீதை, ஆயுத எழுத்து போன்ற தமிழ் படங்களிலும் நடித்து வந்தார். இப்படத்திற்கு பிறகு முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்ற போது திருமணம் செய்து கொண்டார்.
திருமண வாழ்க்கை ஏமாற்றம்:-
துறுதுறு நடிப்பால் அனைத்து ரசிகர்களை ஈர்த்து வந்தார். 2008ஆம் ஆண்டு மாண்டலின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக ஓபனாகவே பேட்டியில் தெரிவித்தார். ஆனால் அதன் பிறகு இருவருக்கும் இடையில் என்ன ஆனது என்பது தெரியவில்லை.
திடீரென 2011ஆம் ஆண்டு வெளிநாட்டைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நன்றாக சென்று கொண்டிருந்த அவரது திருமண வாழ்க்கை 2016ஆம் ஆண்டு வாய்த் தகராறு காரணமாக விவாகரத்து வரை சென்றது.
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக மீரா ஜாஸ்மின் தரப்பில் கூறப்பட்டது. 39 வயதைத் தொட்டிருக்கும் மீரா ஜாஸ்மின் இனிமேல் தன்னுடைய வாழ்க்கையில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என பேட்டிகளில் கூறி வந்தார்.
ரீஎண்ட்ரி:-
தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து படங்களில் லீட் ரோலில் நடிக்க ஆசைப்பட்டு போட்டோஷூட் பக்கம் சென்றுள்ளார். தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் மீரா ஜாஸ்மீன் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.