40 வயதில் எலும்பும் தோலுமாக மாறிய நடிகை மிரா ஜாஸ்மின்! இப்படியொரு போஸ்..
தமிழ் சினிமாவில் ரன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய பிரபலமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். மலையாள பெண்ணாக தமிழில் நல்ல வரவேற்பை பெற்று பாலா, புதிய கீதை போன்ற படங்களின் வெற்றிக்கு உதவினார்.
அதன்பின், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த மீரா ஜாஸ்மின், 2008ல் ராஜேஷ் என்பவரை காதலித்து திருமணம் வரை சென்றார். இடையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர்.
அதன்பின் 2014ல் அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் நடிப்பில் ஆர்வம் கொண்ட மீரா ஜாஸ்மின் மலையாள படங்களில் நடிக்க கமிட்டாகினார்.
க்ளாமர் ரூட்டை கையில் எடுக்கும் மீரா சமீபகாலமாக ரசிகர்களை ஈர்க்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது படுஒல்லியாக மாறி அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.