விவாகரத்தில் முடிந்த 3 திருமணம்..நான் தவறு செய்துவிட்டேன்!! ரவி மோகன் பட நடிகை வேதனை..
மீரா வாசுதேவன்
தெலுங்கில் 2003ல் ரமேஷ் அரவிந்த் நடிப்பில் வெளியான கோல்மால் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை மீரா வாசுதேவன்.

இதன்பின் பாலிவுட்டில் நுழைந்தப்பின் தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெங்கட் பிரபு நடிப்பில் வெளியான உன்னை சரணடைந்தேன் என்ற படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். இதனையடுத்து அறிவுமணி ஜெர்ரி, கத்தி கப்பல் போன்ற படங்களிலும் நடித்து வந்தார் மீரா வாசுதேவன்.
மலையாளத்தில் கிடைத்த வரவேற்பு தமிழில் மீராவிற்கு புகழ கிடைக்கவில்லை என்றாலும் சக்தி நடிப்பில் வெளியான ஆட்ட நாயகன் படத்தில் நடித்தார். அதன்பின் இறுதியாக ரவி மோகன் நடிப்பில் 2018ல் வெளியான அடங்கமறு படத்தில் நடித்திருந்தார்.

3 திருமணம்
கடந்த 2005ல் விஷால் அகர்வால் என்பவரை திருமணம் செய்த 3 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட, 2008ல் விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன்பின் 2012ல் நடிகர் ஜான் கொக்கனை திருமணம் செய்து 2016ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். கடந்த 2024ல் ஒளிப்பதிவாளர் விபுன் புத்யங்கம் என்பவரை 3வது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத விவாகரத்தில் முடிந்துள்ளது.

நான் தவறுகள் செய்துள்ளேன்
3வது திருமணம் விவாகரத்து குறித்து பேசிய மீரா வாசுதேவன், நான் தவறுகள் செய்துள்ளேன், என்னிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை. இப்போது நான் வாழ்க்கையில் முன்னேறி செல்ல வேண்டும். தவறான தகவல்கள் பரவாமல் இருக்கவும், எந்தவிதமான புரிதல் இன்மையும் ஏற்படாதிருக்கவும் தான் நான் சமூக வலைத்தளங்கள் மூலம் விவாகரத்தை அறிவித்தேன். வாழ்க்கையில் அனைத்தையும் சமாளித்து முன்னேற வேண்டும். தற்போது சினிமாவில் பிஸியாக இருக்கிறேன் என்று மீரா வாசுதேவன் தெரிவித்துள்ளார்.