விக் இருக்கோ இல்லையோ, சரக்கு தலையில் இருக்கான்னு பாருங்க!! கண்டபடி பேசிய பிரபல நடிகர்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் சில தினங்களுக்கு முன் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த டாப் 3 இடத்தினை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார். சுமார் 13 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த அந்நிகழ்ச்சியில் விஜய் மாணவர்களுக்கு சில அறிவுரைகளையும் அரசியல் உள்நோக்க கருத்தையும் பேசியிருந்தார்.
இதுகுறித்து பலர் பாராட்டினாலும் சிலர் விமர்சித்தும் வருகிறார்கள். தமிழ் சினிமாவில் வில்லன் ரோலில் நடித்து வரும் நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றி, விஜய்யை விமர்சித்திருக்கிறார். அதில், விஜய்யின் சமீபத்திய மூவ்மெண்ட் அரசியலுக்கு நுழைய தயாராகிவிட்டார்ன்னு தெரிகிறது. அது தப்பில்லை, நடிகர்கள் அரசியலுக்கு வருவதும் தப்பில்லை.
ஆனால், இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு ஒரு மாஸ் இருக்கிறது. ஆனால் அது ஒரு கட்சியை ஆரம்பித்து ஆட்சியை பிடிப்பது சந்தேகம் தான். தற்போது இருக்கும் கட்சிகளின் ஓட்டை பிரிப்பாரே தவிர ஆட்சி பிடிக்கமாட்டார். பிஜேபி-யுடன் கூட்டணி போடுவார் என்று நினைக்கிறேன்.
ரசிகர்களை மட்டும் நம்பி இருக்கும் விஜய், சக நடிகர்களுடன் கனெட்க் ஆகாத விஜய், எப்படி மக்களிடம் கனெக்ட் ஆகுவார் என்று விமர்சித்திருக்கிறார். எப்பவும் விஜய் தனிமையாக தான் இருப்பார். யாரையும் அவருக்கு நெருக்கமானவர்கள் நெருங்கவிட மாட்டார்கள். அந்த மேடையில் பேசியதை வைத்து அரசியலில் நிஜமாக்குவது விஜய்க்கு கஷ்டம்.
அந்த பேச்சுத்திறமை விஜய்க்கு இருக்கிறதா என்றால் அது சந்தேகம் தான் என்று கூறியுள்ளார். விஜய் தலையில் விக் இருக்கு இல்லையான்னு யோசிக்கக்கூடாது சரக்கு இருக்கான்னு பாருங்க என்று கூறியுள்ளார். தலையில் முடி இல்லை என்று பார்ப்பது தவறு, நடிப்பு தான் முக்கியம். இதெல்லாம் சர்ச்சைக்கான கருத்தே கிடையாது. ரஜினிகாந்த் சாரே அதை யோசிக்காமல் நடித்து வருகிறார்.