வசூல் வேட்டையில் மீசைய முறுக்கு 2.. மாபெரும் சாதனை
ஆம்பள திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி.
இவர், 2017-ஆம் ஆண்டு மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும், இயக்குநராகவும் களமிறங்கினார். தனது வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை அவர் இயக்கியிருந்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், 9 வருடங்களுக்கு பின் மீசைய முறுக்கு 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

ஆனால், இம்முறை கானா பாடல்களையும், கானா கலைஞர்களின் வாழ்க்கையையும் மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார். இப்படத்தில் ரம்யா ரங்கநாதன், பாபா பாஸ்கர், கருணாஸ், சைத்ரா, கெத்திகா, நாசர், ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், 11 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள மீசைய முறுக்கு 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 11 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.