12 வயதில் கோடிக்கணக்கில் சொத்து!! யார் இந்த சிறுமி தெரியுமா?
12 வயதில் நடிகை ஒருவர் கோடிக்கணக்கில் சொத்து வைத்திருப்பது அனைவருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதுவும் பாலிவுட்டில் வளர்ந்து வரும் குழந்தை நட்சத்திரம் தானாம்.
இனாயத் வர்மா
2017ல் டியூப்லைட் என்ற பாலிவுட் படத்தில் சல்மான் கானை பேட்டி எடுத்து பிரபலமானார் இனாயத் வர்மா. இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியையும் பேட்டியெடுத்து பிரபலமாகியிருக்கிறார்.
2012ல் லூதியானாவில் பிறந்த இனாயத்தின் தந்தை பெயர் மோஹித், தாய் பெயர் மோனிகா வர்மா. குந்தன் வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியில் படித்து வருகிறார். ரியாலிட்டி சோவில் பங்குபெற்று ஒரு லட்சம் ரூபாய் பரிசை பெற்றார் இனாயத்.
லூடோ, ஷபாஷ் மிது, அஜீப் தாஸ்தான், தூ ஜூத்தி மெயின் மக்கர் போன்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட 'பி ஹாப்பி' என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.
சொத்து மதிப்பு
12 வயதாகும் இனாயத் வர்மாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 13 கோடியாம். இந்த சிறுவயதிலேயே கோடிக்கணக்கில் சொத்துமதிப்பை வைத்து அனைவரது கவனத்தையும் தற்போது இனாயத் வர்மா ஈர்த்து வருகிறார்.