ஐஸ்வர்யா ராய்யை உடல் ரீதியாக தாக்கிய சல்மான் கான்..!! நடிகை ஒப்பன் டாக்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். இவர் மணி ரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
பின் பாலிவுட் பக்கம் சென்ற ஐஸ்வர்யா, தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். ஜீன்ஸ், ராவணன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பொன்னியின் செல்வன் என அவ்வப்போது மட்டுமே தமிழில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராய் - சல்மான் கான்
1999 முதல் 2002 வரை ஐஸ்வர்யா ராய் - சல்மான் கான் இடையிலான காதல் உறவு குறித்து தொடர்ந்து பல செய்திகள் வெளிவந்தன. அதன்பின் இவர்களுடைய காதல் முறிவு பெரும் சர்ச்சையானது.
2002ம் ஆண்டு நேர்காணல் ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராய், சல்மான் கானுடனான முறிவு குறித்து அறிவித்தார். சல்மான் கான் தன்னை சந்தேகித்ததாகவும், ஷாருக்கான் மற்றும் அபிஷேக் பச்சன் போன்ற நடிகர்களுடன் இணைந்து தவறாக பேசியதாகவும் ஐஸ்வர்யா ராய் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் பேட்டி ஒன்றில் பேசுகையில், "சல்மான் கான் என்னை பலமுறை உடல் ரீதியாக தாக்கினார். அதிர்ஷ்டவசமாக காயங்கள் எதுவும் இல்லை. மறுபுறம் நான் எதுவும் நடக்காதது போல் வேலைக்கு சென்றேன்" என அவர் கூறினார். சல்மான் கான் தன்னை உடல் ரீதியாக தாக்கியது குறித்து ஐஸ்வர்யா ராய் பேசிய விஷயம் அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்து.