முரண்டு பிடித்ததால் மெய்யழகன் படத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு..தேவையா இதெல்லாம்

Arvind Swamy Karthi Meiyazhagan
By Tony Sep 30, 2024 05:30 AM GMT
Tony

Tony

Report

மெய்யழகன்

கார்த்தி நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் தான் மெய்யழகன். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

ஆனால், இப்படம் முதல் நாள் தமிழகத்தில் வெறும் 240 தியேட்டரில் தான் ரிலிஸ் ஆனதாம், கார்த்தி மார்க்கெட்டிற்கு இது மிக மிக குறைவு.

காரணம் இது தான்

இந்த தியேட்டர் எண்ணிக்கை என்பது கவின், ஹரிஸ் கல்யான் போன்ற நடிகர்களுக்கான தியேட்டர் எண்ணிக்கை அளவு தான்.

இதற்கு முக்கிய காரணம் தேவரா தானாம், தேவரா படமும் மெய்யழகன் படமும் ஒரே நாளில் வர, திரையரங்க உரிமையாளர்கள் இரண்டு படத்திற்கும் இரண்டு ஷோ என சொன்னார்களாம்.

முரண்டு பிடித்ததால் மெய்யழகன் படத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு..தேவையா இதெல்லாம் | Meiyazhagan Theatre Problem

உடனே மெய்யழகன் டீம், அது எப்படி கார்த்தி படத்துக்கு 2 ஷோ தானா என்று உங்கள் தியேட்டருக்கே படம் இல்லை என்று கூற, வெறும் 240 தியேட்டரில் தான் மெய்யழகன் முதல் நாள் ரிலிஸாகியுள்ளது.