புஷ்பாவில் எப்படி சமந்தாவின் குத்தாட்டமோ எம்ஜிஆர் படத்தில் அந்த நடிகை!! பல ஆண்டு ரகசியம்
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி பல கோடி வசூல் படமாக ஹிட் கொடுத்தது புஷ்மா படம்.
இப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தில் ஐட்டம் பாடலான ஊ சொல்றியா பாடல் பட்டித்தொட்டி எங்கும் பரவியது. இப்பாடலுக்கு நடிகை சமந்தாவின் கிளாமரான ஆட்டம் தான் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
கவர்ச்சியான ஆட்டத்திற்கு பல கோடி ரசிகர்கள் மயங்கிய நிலையில் இப்படியான செயலை அந்த காலத்திலேயே ஆரம்பித்திருக்கிறது என சித்ரா லட்சுமணன் கூரியிருக்கிறார். புஷ்பா பாடலுக்கு சமந்தாவின் ஆட்டம் அற்புதம் என்றும் இப்படி பிரபலமான நடிகைகள் ஒரு படத்தில் ஆட்டம் போடுவடு என்பது சகஜமாகிவிட்டது.
தற்போது ஒரு ஃபேஷனாக மாறியதற்கு முதலில் விதை போட்டது எம்ஜிஆர் பட தயாரிப்பாளர் டி ஆர் சுந்தரம் தான்.
எம்ஜிஆர் நடிப்பில் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் ஒரு பாடலுக்காக இந்தி நடிகை வஹீதா ரஹ்மானை இறக்கியிருக்கிறார் தயாரிப்பாளர் டி ஆர் சுந்தரம்.
டாப் நடிகையாக வஹீதா பாலிவுட்டில் பிரபலமாகியிருந்ததை சரியாக பயன்படுத்தி மிகப்பெரியளவில் ஈர்க்க வைத்தாராம்.